ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு அரசியல் மற்றும் பாதுகாப்புத் தீர்வு ஒன்று தேவை என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்து அங்கு ஹெல்மண்ட் பகுதியில் பிரிட்டிஷ் சிப்பாய்களைச் சந்தித்த அவர் அங்கு உரையாற்றுகையில், தலிபான்கள் வன்செயல்களைக் கைவிடும் பட்சத்தில், மேற்கொள்ளப்படக் கூடிய அனைத்து அமைதி நடவடிக்கைகளிலும் அவர்களையும் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் 2002ஆம் ஆண்டிலேயே மேற்குலகம் அவர்களுடன் பேச்சு நடத்தியிருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் ஜெனரலான நிக் கார்டர் அவர்கள் கூறியதை அடுத்து பிரதமரின் இந்தக் கருத்து வந்திருக்கிறது.
bbc. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக