puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 18 ஜூன், 2013

வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு


வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.
வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், கங்கை, யமுனை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் பல பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் வெள்ளத்தில் சிக்கினார். இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணாமாக முதல்வர் மற்றும் அவருடன் அலுவலர்கள் கின்னாவூர் சென்றனர்.
இந்நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக முதல்வர் இந்த பகுதியில் இருந்து எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 60 மணி நேரமாக இங்கு இருக்க வேண்டியதாயிற்று. இந்நிலையில் மாநில ஹெலிகாப்டர் உதவி மூலம் அவர் மீட்கப்பட்டார். இவருடன் இருந்த அலுவலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் மீட்டு கொண்டு வரப்பட்டனர்.
இதுகுறித்து பொலிஸ் துணை கமிஷ்னர் எம். பத்தானியா கூறுகையில், சங்லா கிராமத்தில் போக்குவரத்து துண்டிப்பு காரணமாக தவித்த முதல்வர் மற்றும் அலுவலர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
இன்னும் இங்கு தவிக்கும் 1500 சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியும் தொடர்ந்து வருகிறது. சாலை போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை சரி செய்யும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.

.newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக