.
| |
Sunday, 23 June, 2013 01:02 PM
| |
. | |
. | |
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பது வருமாறு:
உத்தரகாண்ட் மாநிலத்தின் சில மாவட்டங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பெருமளவில் உயிரிழப்பும், உடமைகள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாழும் மக்களுக்கும், புனித ஸ்தலங்களான கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் கேமுத்சாகிப் போன்ற இடங்களுக்குச் சென்ற யாத்ரீகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் சொல்லொண்ணா துயரம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற யாத்ரீகர்களின் இன்னல்களை தீர்க்க தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நான் ஏற்கனவே அறிவித்துள்ளேன். ஜூன் 19ம் தேதி எனது ஆணையின் படி உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு தொலை பேசி எண்களுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. ஜூன் 20ம் தேதி தமிழ்நாட்டில் இருந்து சென்ற யாத்ரீகர்களை மீட்டு கொண்டு வருவது குறித்து நான் உயர் மட்ட ஆலோசனை நடத்தினேன். எனது அறிவுறுத்தலின் படி டெல்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்பு பிரிதிநிதி தலைமையில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை ஆணையர், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு துறை செயலாளர் ஆகியோரை கொண்ட குழு டேராடூன் விரைந்தது. அங்கு சிக்கியிருந்த தமிழக யாத்ரீகர்கள் புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட பிற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. எனது அறிவுறுத்தலின் படி மாநில அரசின் செலவிலேயே, அவர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். முதல்கட்டமாக ஜூன் 21ம் தேதி சென்னை வந்த 83 யாத்ரீகர்களை மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.அதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து செய்து கொடுக்கப்பட்டது. ஜன் 22ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மேலும் 275 யாத்ரீகர்களுக்கு இதேபோன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.மேலும் உத்தரகாண்டில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து யாத்ரீகர்களுக்கும் இதே போன்ற வசதிகளை எனது அரசு செய்து கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது. மாநில அரசு சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும், இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் உத்தரகாண்ட் அரசு பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த அரசுக்கு தமிழக மக்களும், மாநில அரசும் உறுதுணையாக இருக்கும். இதற்கு அடையாளமாக உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உத்தரகாண்ட் அரசுக்கு ரூ.5 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் உத்தரகாண்ட் அரசுக்கு தேவைப்படும் எந்த உதவியையும் அளிக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
maalaisudar thanks
|
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
ஞாயிறு, 23 ஜூன், 2013
ரூ.5கோடி நிதியுதவி:முதலமைச்சர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக