தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டம்குளம் கிராமத்தில் திலகரத்தினம் தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. 11.06.2013 செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 3 மணி அளவில் தீப்பெட்டி ஆலையில் உள்ள பணியாளர்கள் வேலையில் மும்மரமாக இருந்தனர்.
அப்போது மருந்துகள் அடங்கிய தீக்குச்சி பார்களை ஒரு கண்டெய்னரில் இருந்து மற்றொரு கண்டெய்னருக்கு மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத உரசல் காரணமாக தீக்குச்சி பார்கள் தீப்பிடித்தன.
இந்த தீ மளமளவென பரவியது. இந்த புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால், கோவில்பட்டி அருகே உள்ள 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் உமா மகேஷ்வரி (18), லெட்சுமி (55), சுகந்தி (23), பானுமதி (45) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிழக்கு காவல்நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பரமசிவம்
படங்கள்: ராம்குமார்
படங்கள்: ராம்குமார்
nakkheeran thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக