மும்பை, ஜூன் 10-
மகராஷ்டிர மாநிலத்தலைநகர் மும்பையில் உள்ள மஹிம் நகர் கேடல் சாலையில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. மழை பெய்ததை அடுத்து இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த நிறைய பேர் அருகில் உள்ள பாபா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு படைப்பிரிவு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மும்பையில் நேற்றிலிருந்து தென்மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக