நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை சி.டி.எம்.புரத்தைச் சேர்ந்தவர் மைதீன் (வயது 38). இவர் பறக்கை செட்டித்தெரு சந்திப்பில் புரோட்டா கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலையில் மைதீன் திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மைதீனை பல இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இன்று காலை என்.ஜி.ஓ. காலனியை அடுத்த முகிலன் விளை சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள காலி மனையில் மைதீன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலையில் கம்பியால் பலமாக தாக்கப்பட்டு இருந்தது. மேலும் முதுகில் 9 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது.
மைதீன் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் முனியசாமி, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பிணமாக கிடந்த மைதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மைதீன் பிணமாக கிடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
பிணமாக கிடந்த மைதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மைதீன் பிணமாக கிடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனால் கொலையாளிகளிடம் இருந்து தப்பிக்க மைதீன் முயற்சி செய்துள்ளது தெரியவந்தது. அவரை கொலையாளிகள் ஓட, ஓட விரட்டி கொலை செய்துள்ளனர். அப்போது மைதீனின் செருப்பு, வாட்ச் ஆகியவை ஆங்காங்கே சிதறியுள்ளன. அவற்றையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 3 அடி நீள ஒரு கம்பியும் அந்த இடத்தில் கிடந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினர்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பறக்கை செட்டித்தெருவைச் சேர்ந்த இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் சுசீந்திரம் போலீசார் விரைந்து சென்றனர். கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோரும் விரைந்தனர். பிணம் கைப்பற்றப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விசாரணையில் மைதீன் அப்துல்காதரை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை தேடிச் சென்றனர். அப்போது அவர் மாயமாகிவிட்ட தகவல் கிடைத்தது. எனவே, இந்த கொலையை மணிகண்டன் செய்திருப்பதாக கருதி சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மணிகண்டனின் சகோதரர் ரமேஷ் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிலர் கடந்த 15–6–2012 அன்று ரமேசை அடித்து கொலை செய்தனர். இந்த கொலைச் சம்பவம் நிகழ காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறது. இந்த கொலைக்கு பழி தீர்க்கவே மைதீன் அப்துல்காதரை, மணிகண்டன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இவர்கள் நேற்று இரவே மணிக்கண்டன் மற்றும் அர்ஜூனன் ஆகியோரை கைதுச் செய்தனர். இவர்களிடம்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரமேஷின் சமூகத்தைச் சார்ந்த பாசிஸ்டுகள் இக்கொலையின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரமேஷ் கொலைச்ச்செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவுறுவதையொட்டி பல அவரது மரணத்தை நினைவுக்கூறும் வகையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் கோட்டார் பகுதியின் பல இடங்களில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே மைதீன் அப்துல்காதர் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். கொலையாளியை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனக்கூறினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சார்ந்தவர்களும் இதைவற்புறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள், மைதீன் அப்துல்காதர் உடலை பெற்றுக்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட மைதீன் அப்துல்காதருக்கு நாகர்கோவில் கணேசபுரம் சொந்த ஊர். இவருக்கு ரம்ஜான்பீவி(வயது 39) என்கிற மனைவியும், ரினோசா என்கிறமகள், ரிபாய் என்கிற மகனும் உள்ளனர்.
-news thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக