தமிழக சட்டசபையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எம்எல்ஏக்களின் பலம் 29ஆக இருந்தது. இதில் 6 எம்எல்ஏக்கள், அதிமுக அரசுக்கு ஆதரவாக திரும்பிவிட்டனர். இதனால் தேமுதிகவின் பலம் 23ஆக குறைந்தது.
இப்போது டெல்லி மேல்சபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மேலும் சில தேமுதிக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முக்கிய நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன், புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேலும் இரண்டு தேமுதிக எம்எல்ஏக்கள் ஓரிரு நாளில் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவுக்கு தங்களது ஆதரவினை தெரிவிப்பார்கள் என்று அதிமுக தரப்பில் பேச்சு அடிபடுகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, உண்மைதான் என்றும் அந்த எம்எல்ஏக்கள் பெயரை வெளியிடவும் மறுத்துவிட்டனர்.
நமது நிருபர்
nakkheeran. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக