ஹப்லாங், ஜூன் 11-
அசாம் மாநிலம் ஹப்லாங் மத்திய சிறைச்சாலையில் இருந்து 2 கைதிகள் இன்று அதிகாலை தப்பி ஓடிவிட்டனர். நிழல் உலக குழுவான திமா தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த டேவிட் கெம்ப்ராய் என்ற ஆக்சன் திமாசா மற்றும் போங்கிர்சன் கெல்மா ஆகியோர், அசாம் மாநிலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஹப்லாங் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் அவர்கள் இருவரும் தங்கள் அறையின் தகர கூரையை உடைத்து வெளியேறி, பின்னர் சுற்றுச்சுவரில் உள்ள ஓட்டை வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கைதிகள் தப்பிச் சென்றது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டும் இதே சிறைச்சாலையில் இருந்து கிளர்ச்சியாளர்கள் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக