June 14, 2013 09:58 am
சிங்கப்பூரில் குடித்து விட்டு, போலீஸ் முகத்தில் துப்பிய பிரிட்டன் நாட்டவருக்கு 10ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் போர்கன் டங்கன்,34. சிங்கப்பூரில் இயங்கும் விமான நிறுவனத்தின்சார்பில் வெளியிடப்படும் பத்திரிகையில், இவர்ஆசிரியராக இருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மது அருந்தி விட்டு, சாலையில் விழுந்து கிடந்தார்.அந்த வழியாக சென்ற இரண்டு போலீசார்,டங்கனை எழுப்பி விசாரித்தனர். போலீசைமரியாதை குறைவாக பேசியதற்காக, அவரை, கை விலங்கிட்டு அழைத்து சென்றனர். இதனால்,கோபமடைந்த டங்கன், போலீசார் மீதுஎச்சில் துப்பினார்.
இதற்காக, அவர் கைது செய்யப்பட்டுவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கும்படி, அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால், டங்கனுக்கு10 ஆயிரம் டொலர் அபராதம் மட்டும் விதித்து, நீதிபதி தீர்ப்புகூறினார்.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக