puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 14 மே, 2013

வன்முறை:பல கோடி சேதம்

.
சென்னை, மே 13:பாமகவினர் நடத்திய வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 111 பேர் படுகாயமடைந்துள்ளனர். 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 120 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.
.
அவர்கள் நடத்திய வன்முறையில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தெரிவித்தார்.அவர் இதுபற்றி கூறியதாவது:

பாட்டாளி மக்கள் கட்சியினர் நிகழ்த்திய இவ்வன்முறை சம்பவங்கள் காரணமாக இரண்டு சரக்கு லாரிகள் மற்றும்  14 பேருந்துகள் உட்பட 16 வாகனங்கள் தீக்கிரை ஆகியுள்ளதுடன், ஒரு அப்பாவி ஓட்டுநர் தீ காயம் அடைந்து இறந்துள்ளார்.  மேலும், வாகனங்கள் மீது கல் வீசி தாக்கிய சம்பவங்களில் ஒரு அப்பாவி லாரி ஓட்டுநர் மற்றும் அப்பாவி பயணி ஒருவர் இறந்துள்ளதுடன், 111 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும், அரசு பேருந்துகள் மற்றும்  தனியார் வாகனங்கள் என மொத்தம் 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியினரால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும். இரண்டு பாலங்கள் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நெடுஞ்சாலைகளில் நிழல் தந்து வந்த 120 மரங்கள் சாலைகளில் வெட்டிச் சாய்க்கப்பட்டும், 45 மரங்கள் எரிக்கப்பட்டும், மொத்தம் 165 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும்.  வளர்ந்த பின், நூற்றுக் கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத் தந்து, காய்  கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே வெட்டிச் சாய்ப்பதற்கு சமமாகும். பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஒரு புறம் மரங்களை நடுவதாகக் கூறிக் கொண்டு, மறு புறம் மரங்களை வெட்டி சாய்ப்பது தீ வைத்து எரிப்பது என்பது “படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழியைத் தான் நினைவு படுத்துகிறது.

காவல் துறையினர், கடந்த பல நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறைச் செயல்களை தடுக்க முழு வீச்சில் தங்களது திறன் முழுவதையும் உபயோகித்து நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டும், முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும்,

மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகின்றனர். மேலும், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.  இதுவரை 5,720 நபர்கள் தடுப்பு நடவடிக்கையாகவும், 1,744 நபர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 20 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினர், கடந்த சில நாட்களாக நிகழ்த்தி வரும் வன்முறைச் செயல்களினால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பகல் நேரங்களைப் பொறுத்த வரையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், நாமக்கல், தருமபுரி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், 1.5.2013 அன்று 1,601 தடப் பேருந்துகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இயக்கப்படவில்லை.

பின்னர் அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக 10.5.2013 முதல் இது 219 ஆக குறைக்கப்பட்டது.  இரவு நேரங்களைப் பொறுத்த வரையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி நகரப் பேருந்துகள் மாலை 6 மணிக்கு மேலும், புறநகர் பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேலும் இந்த மாவட்டங்களில் இயக்கப்படுவதில்லை. மொத்தத்தில், 2,267 தடப் பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

maalaisudar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக