அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் ஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும், இந்த கட்டுப்பாட்டை எல்லாம் மீறி அமெரிக்காவின் பல நகரங்களில் ஆகஸ்ட் 21ம் தேதியன்று மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹோல்லி வேன் வோஸ்ட் நியூயார்க் நகரிலும் தனக்கே உரிய பாணியில் சுற்றி வந்தபோது அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர்.
பல மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் ஹோல்லி வேன் வோஸ்ட் சார்பில் வாதாடிய வக்கீல், '1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பெண்கள் மேலாடை அணியாமல் செல்வதை குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நியூயார்க் கோர்ட், 'முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்' என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, நியூயார்க் நகரில் பணியாற்றும் 34 ஆயிரம் போலீசாருக்கு நகர போலீஸ் தலைமையகம் நேற்று அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
'பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப் பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம்' என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
newsonews thanks |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக