இராமநாதபுரம் மே 26: இராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், பார்வையாளர்களையும் அங்கு பணி புரியும் அதிகாரிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக மருத்துவமனைக்கு சென்ற எம்.எல்.ஏ வை இணை இயக்குனர் மரு.மீனாட்சி சுந்தரம், நிலைய மருத்துவ அதிகாரி மரு.சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, நவீன எக்ஸ்ரே பிரிவு, மற்றும் சி.டி.ஸ்கேன் பிரிவு, நரம்பியல் பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டார். அங்குள்ள கழிப்பறையில் காணப்படும் குறைகள் மற்றும் கழிவு நீர் தேங்குவது குறித்த குறைபாடுகள், தேவைகள் சீர் செய்யப்பட வேண்டியது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி உத்திரவிட்டார்.
பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இணை இயக்குனர் மரு.மீனாட்சி சுந்தரம், நிலைய கண்காணிப்பாளர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோருடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார். அப்போது இணை இயக்குனர், இம்மருத்துவமனையை தரம் உயர்த்தும் வகையில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவில் பொதுவான படுக்கைகள் 100ம் மனநோய் பிரிவில் கூடுதலாக 50ம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
த.மு.மு.க.மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பாகர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்துல்லா, பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க. ம.ம.க.வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக