puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 18 மே, 2013

ஓரினக் கலப்புத் திருமணத்தை சட்டபூர்வமாக்கினார் பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டே



வெள்ளிக்கிழமை பிரான்ஸின் அரசியலமைப்புச் சபையில்  (Constitutional Council) ஓரினக் கலப்புத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டே (Francois Hollande) இதற்கான பத்திரத்தில் கையொப்பமிட்டதாக பிரான்ஸின் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் நீண்ட காலமாக பிரான்ஸில் நிலுவையிலிருந்த ஓரினக் கலப்புத் திருமண அங்கீகாரம் இன்று சட்டபூர்வமாக்கப் பட்டுள்ளது. ஆண் பெண் பால் வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் இன்னொருவரைத் திருமணம் செய்யலாம் என்று அனுமதியளித்துள்ள இச்சட்டத்தின் மூலம் ஹொல்லாண்டே தனது பிரதான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இச்சட்டத்துக்கு எதிராக பிரான்ஸில் 10 ஆயிரக் கணக்கான மக்கள் முக்கியமாக வலது சாரி மற்றும் மதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாதக் கணக்காக ஆர்ப்பாட்டப் பேரணியினை மேற்கொண்டிருந்தனர். எனினும் இந்த எதிர்ப்பை மீறி இது சட்டபூர்வமாக்கப் பட்டதால் மறுபடியும் மே 26 ஆம் திகதி இச்சட்டத்தை எதிர்த்து பாரியளவு மக்கள் கூட்டம் திரளவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் மே 29 ஆம் திகதி பிரான்ஸில் முதல் ஓரினக் கலப்புத் திருமணத்தை (Gay marriage) பிரான்ஸின் தெற்கேயுள்ள மொன்ட்பெல்லியெர் நகரில் மேயர் முன்னிலையில் நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. உலகில் ஓரினக் கலப்புத் திருமணத்தை அங்கீகரித்த 14 ஆவது நாடு பிரான்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக