இராமநாதபுரம் மே 27: இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைப்பது குறித்து இராமநாதபுரம் தொகுதி MLA, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆய்வு மேற்கொண்டார்.
இராமநாதபுரம் நகரில் பிரதான பஸ் நிறுத்தமான அரண்மனை பகுதியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் வெயில் மழை காலங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ அரண்மனை பகுதிக்கு சென்று பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் இராமநாதபுரம் நகரின் மற்றொரு பிரதான பஸ் நிறுத்தமான கேணிக்கரை பகுதிக்கும் சென்று பயணிகள் நிழற்குடை அமையவுள்ள இடத்தை தேர்வு செய்து பார்வையிட்டார். அப்போது இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) மதிவாணனிடம் சிறு வர்த்தகர்களுக்கு பாதிப்பின்றியும் பயணிகளுக்கு பயனுள்ள வகையிலும் அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை உடனே துவங்கி நிறைவேற்றும்படி எம்.எல்.ஏ உத்திரவிட்டார்.
த.மு.மு.க.மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி,மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய,நகர நிர்வாகிகள் பாக்கர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்துல்லா, பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க., ம.ம.க.வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக