உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று லக்னோ கோமதி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதையொட்டி அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் தலைமைக் காவலர் முகுல் சந்திர யாதவுக்கும், காவலர் சுனிர் தீக்சித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் லத்தியால் தாக்கிக்கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நடந்த இந்த சண்டையில் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவின் கார் அந்த இடத்தைக் கடந்து சென்ற சிறிது நேரத்திற்குள், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
news tamil.webdunia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக