பனைக்குளம்,
டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ள பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
டெங்கு காய்ச்சல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே சில கிராமங்களில் வைரஸ்,டெங்கு காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு,தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங் களில் அனு மதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு செம்படம்பர், ஆக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் பொதுமக்கள் வைரஸ்,டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அப் போது தீவிர நடவடிக் கையால் காய்ச்சல் பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டு பொது மக்கள் அவதிப் பட்டு வருகின் றனர்.
மாவட்ட கலெக்டர் நந்த குமார் உத்தரவின் பேரில் அந்தந்த ஊராட்சி தலை வர்கள், செயலாளர்கள், துப் புரவு பணியாளர்கள், சுகாதா ரத்துறையினர் இணைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட் டாலும் டெங்கு பாதிப் பால் பலர் அரசு மற்றும் ராம நாதபுரம், மதுரை தனியார் ஆஸ்பத்தி ரிகளில் அனுமதிக் கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது வாக கடற்கரை ஓர கிராமங் களில் டெங்கு பாதிப்பு அதிக மாக உள்ளதாக கூறப் படு கிறது.
தடுப்பு நடவடிக்கை
எனவே மீண்டும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கையை தீவிரப் படுத்த வேண்டும் வீடுவீடாக சென்று அபேட், பைரெத்தினம் மருந் துகளை அடித்து கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். கிராமங் களில் சிறப்பு முகாம்கள் மூலம் டேங்கு,வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தபரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை யினருக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
dailythanthi thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக