puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 28 மே, 2013

தீக்குளித்த தேரர் தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்கள்



2தீக்குளித்தது தற்கொலை செய்துகொண்ட  போவத்தே இந்திர ரத்ன தேரர் அவரின் மரணத்துக்கு மூன்று  நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று  சிங்கள இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திர ரத்ன தேரர் முன்னர் பிரதேச சபை உறுப்பினராக இருக்கும்போது, மின்சார சபையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 20 இலட்சமும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக்கூறி 10 இலட்சமும் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் . இவ்விடயத்தில் பிக்குவை கைதுசெய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என குறித்த சிங்கள இணையத்தளம்  தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் அது வெளியிட்டுள்ள தகவலில் , தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்க வந்தபோது, பிக்குகள் கூட்டத்திலிருந்து கூச்சலிட்டவர்என்றும் , பாதுகாப்பு படையினருக்கு தான் அணிந்திருந்த சிவுறவை அவிழ்த்துக் காட்டினார் என்றும் கடந்த வருடம் வீரகெட்டியவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல், அதே ஊரில் இவ்வருடம் பள்ளிவாசல் மீது தாக்குதல் ஆகியவற்றை குறித்த தேரர் நடாத்தியுள்ளார் என்றும் அந்த சிங்கள இணையத்தளம்  தகவல்களை வெளியிட்டுள்ளது.
தீக்குளித்து மரணமான போவத்த இந்தரத்தன தேரரின் இறுதி கிரியைகள் இன்று மாலை பொரனுவ மைதானத்தில் இடம் பெற்றது.ஜாதிக ஹெல உறுமய, பொது பல சேனா , சின்ஹல ராவைய ஆகியவற்றின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகமாக இதில் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு அமைச்சரை பாட்டாளி சம்பிக்க ரணவக்க உரையாரியுள்ளார் , பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்னவும் இறுதி ஊர்வலத்தில் உரையாற்றியுள்ளார் .அமைச்சர் ஜோன் செனவிரட்ன உரையாற்றும்போது சில தேரர்களும் ,அவர்களின் ஆதரவாளர்கள் சிலரும் கூச்சல் எழுப்பியுள்ளனர் .
இதுதவிர, காவத்தை பிரதேசத்தில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரதேசத்தின்  மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டிருந்த நிலையில் கஹவத்த, பகுதியில்  மஞ்சள் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது . நீதிமன்ற உத்தரவில் பிரகாரம் பொலிசாரின் பாதுகாப்பில் இன்று அவரின் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்றுள்ளது .
32

lankamuslim. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக