May 30,
2013 09:12 am
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உலகப்புகழ் பெற்ற கன்சாஸ்
பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு
விழாவில் சவுதி அரேபியாவை சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம்
பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை
பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை
பட்டமும் பெற்றனர்.தனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று
முனைவர் ஆவது தான் தனது வாழ்நாள் லட்சியம் என்று கூறினார்.
தாயாரின் கல்வி வேட்கையைப் பற்றி கருத்து கூறிய
சலாம், என்னை
விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார். எனது பாடங்களிலும்
அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில்
பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம் என்றார்.அரபு நாட்டு
ஊடகங்களும், மேற்கத்திய நாட்டு ஊடகங்களும் இந்த பட்டமளிப்பு சம்பவத்தை
பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக