May 30,
2013 11:20 am
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த கொண்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர்
லாரி டிரைவர் மோகன்ராஜ் (42). இவரது
மனைவி மஞ்சுளா (35).
இவர்களுக்கு18 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும்
ஒரு மகன் உள்ளார்.
மோகன்ராஜுக்கும் அதே
பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கூடாநட்பு இருந்துள்ளது, இதனால்
கணவன் மீது வெறுப்படைந்த மஞ்சுளா
கடந்த ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து சென்று தனியாக வீடு எடுத்து வசித்து
வருகிறார்.
சமீபத்தில், மோகன்ராஜ் தனது மனைவி மஞ்சுளாவிடம் சென்று தான் திருந்தி
விட்டதாகவும்,
இனி நான் உன்னோடுதான் இருப்பேன் என்றுகூறி வீட்டுக்கு
அழைத்து வந்துள்ளார்
மேலும், சொந்தமாக லாரி வாங்க கொஞ்சம் பணம் வேண்டும் என கூறி
மஞ்சுளாவின் கழுத்திலிருந்த20 பவுன்
நகையை வாங்கிச் சென்றுள்ளார் மஞ்சுளாவின் நகைளை விற்ற
மோகன்ராஜ் லாரி வாங்காமல்,தனது கள்ளக்காதலியுடன் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட மஞ்சுளா மோகன்ராஜிடம் போய் தட்டிகேட்ட போது
அவரை கொலை செய்துவிடுவதாக மோகன்ராஜ் மிரட்டினார். இது குறித்து மஞ்சுளா
பர்கூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்திய போலீஸார் மோகன்ராஜை கைது செய்துள்ளனர்.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக