May 29,
2013 09:03 am
சுமார்
நானூறு வருடங்களுக்கு முன்னால் உலகில் ´லிட்டில் ஐஸ்
ஏஜ்´ என்று
சொல்லப்படும் பனிப்பருவம் ஏற்பட்ட சமயத்தில் உறைந்துபோன தாவரங்கள் சில தற்போது மீண்டும் உயிர்ப்பித்து துளிர்க்கத்
துவங்கியுள்ளன.
கனடாவின் வட துருவ நிலப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் அண்மையில் பனிப் படலங்கள் கரைந்த இடங்களில்
இருந்துபல கலமாக செத்துக் கிடப்பதாகத் தெரிந்த சில பாசி வகைகளை எடுத்து வந்து
பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆராய்ந்துகொண்டிருந்த
நேரத்தில், அவை
மீண்டும் உயிர்ப்பெற்று துளிர்த்தன என்று விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்.
செத்த
நிலையில் இருந்து உயிர்ப்பெரும் தாவரங்களின் இந்த
வித்தையைப் அவதானிப்பது,
ஆயிரக்கணக்கான வருடங்களில் ஒரு முறை நமது பூமி
பனிப் பருவத்துக்குள் சென்று திரும்பும்போது, அதன்
பாதிப்பிலிருந்து இயற்கை எவ்வாறு மீள்கிறது என்பதைப் நாம் புரிந்துகொள்ள
உதவுமமென நம்புவதாக என அல்பர்ட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்.
புரொசீடிங்க்ஸ் ஆஃப் த நேஷனல் அகாடமி ஆஃப்
சயின்சஸ் என்ற பிரசுரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக