|
|
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி எலியத்தூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் கலியமூர்த்தி. இவரது மனைவி தேவி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்
உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. சென்னை நீலாங்கரை எல்லையம்மன் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தேவி சித்தாள் வேலை செய்து வந்தார்.
இவருக்கும், எதிர்வீட்டில் வசிக்கும் சுதாகருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சுதாகரின் மனைவி பத்மா இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களது கள்ளத்தொடர்பு நீடித்தது.
இதுகுறித்து நீலாங்கரை போலீசில் பத்மா புகார் செய்தார். போலீசார் சுதாகர், தேவியை காவல்நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது, இனி இருவரும் சந்திக்கக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பினர். இதற்கிடையே, மனைவி தேவியை பார்க்க கணவன் கலியமூர்த்தி நீலாங்கரை வந்தார்.
கடந்த 16,3,2013 அன்றிரவு சாப்பிட்டுவிட்டு தேவியும், கலியமூர்த்தியும் தூங்க சென்றனர். பிறகு சுதாகருக்கு போன் செய்த கலியமூர்த்தி, எனது மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள் என கூறியுள்ளார்.
அங்கு சுதாகர் வந்தபோது வீடு பூட்டி கிடந்ததால் நீலாங்கரை போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், தேவியை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது கணவன் கலியமூர்த்தி என தெரியவந்தது.
எனவே, தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த கலியமூர்த்தியை போலீசார் தேடினர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கலியமூர்த்தி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அங்கு விரைந்த போலீசார் கலியமூர்த்தியை கைது செய்தனர்.
viyapu thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக