puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 18 மே, 2013

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்ததற்கு காரணம் என்ன? - விசாரணை ஆரம்பம்



கடந்த வாரம் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் கூரை  இடிந்து விழுந்தது
.
அப்போது விடியற்காலை நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. எனவே யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதை அடுத்து, புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின்  மேற்கூரை இடிந்து விழுந்தது எப்படி, என்று மத்திய இணை அமைச்சர் விசாரித்து வருகிறார்.

சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச, மற்றும் உள்நாட்டு விமான முனையங்கள் 2 ஆயிரத்து 15 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டது. இந்த விமான முனையங்களுக்கு கடந்த 31ம் திகதி திறப்பு விழாவும் நடந்தது. புதுப்பிக்கப்பட்டு 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் கடந்த 13ம் திகதி 2அதிகாலை  மணி அளவில் புதிய உள்நாட்டு முனையத்தின் பகுதியில், அதுவும் பயணிகள் புறப்பாடு இருக்கும் இடத்தில் விமான முனையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

அந்த நேரத்தில் விமான போக்குவரத்து எதுவும் இல்லாததால், பயணிகளோ, அதிகாரிகளோ அலுவலர்களோ இல்லை. அதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் இது குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு பெய்த மழையால்தான் மேற்கூரை இடிந்து விழுந்தது என்று அறிக்கை அளித்தனர்.

இதை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஏற்கவில்லை. இதை அடுத்து விசாரணை நடத்த திருவனந்த புரத்தில் இருந்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வேணுகோபால் சென்னை வந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர் காலை 9 மணி முதல், மாலை 6 மணி வரை, சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால் மற்றும் விமான நிலைய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இருப்பினும் இது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக