பதிவு செய்த நாள் -
மே 15, 2013 at 11:02:08 AM
தமிழகத்தில் சென்னையைப் போல் மற்ற 9 மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அம்மா மலிவு விலை உணவகம் திட்டம் சென்னை மாநகராட்சியில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளிலும் இத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி இந்த மாத இறுதிக்குள் முதல் கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெனுவில் மாற்றம்: சென்னையில்,இதுவரை மலிவு விலை உணவகங்களில் காலை சிற்றுண்டிக்கு இட்லி மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனிமேல் பொங்கலும் விறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி எலுமிச்சை சாதம், கரிவேப்பிலை சாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செப்டம்பர் மாதம் முதல் மாலையில் சப்பாத்தியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3க்கு 2 சப்பாத்திகளும் அதற்கு குருமா அல்லது பருப்பு கடைசல் வழங்கப்படும்
.puthiyathalaimurai.tv thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக