- SATURDAY, 18 MAY 2013 13:03
சி பி ஐ சுதந்திரமாக செயல்பட் வழிவகை செய்ய வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி,
மத்திய அரசு குழுவில் இடம்ப பெற்றுள்ள நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சி பி ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்பதை உறுதி செய்வோம், என்று கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறையில் பெருமளவு மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்கிற மத்திய கணக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையின் காரணமான பிரதமர் மன்மோகன் சிங், உடனடியாக இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று, கடந்த வருடம், பெரும் பிரச்சனை கிளம்பியது. இதை அடுத்து இந்த வழக்கை சி பி ஐ விசாரித்து வந்தது.
கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கின் விசாரணை வரைவு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர், மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் சி பி ஐ தயாரித்து இருந்த விசாரணை வரைவு அறிக்கையை வாங்கி பார்த்துள்ளனர். அதோடு விடாமல் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் விசாரணை அறிக்கையில் பிரதமருக்கு சாதகமாக சில திருத்தங்களும் செய்ததாக, சி பி ஐ தலைவர் ரஞ்சித் சின்ஹா, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.
இதனால் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சி பி ஐ விசாரணையில் யாரின் குறுக்கீடும் இல்லாதவாறு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இதை அடுத்து, சி பிஐ சுதந்திரமாக செயல்பட சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று, மத்திய நிதி அமைச்சர் தலைமையில் கபில்சிபல், மனீஷ் திவாரி, நாராயணசாமி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இது குறித்து லணடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ப.சிதமபரம், "சி பி ஐ க்கு நாங்கள் செயல்பாட்டு சுதந்திரம் அளிப்போம். விசாரணையைப் பொறுத்த மட்டில், செயல்பாட்டு சுதந்திரத்தை சி பி ஐ பெறும். உலகம் எங்கும் எல்லா அமைப்புக்களும் யாரோ ஒருவருக்கு பதில் சொல்ல கடமைபட்டதாகத்தான் இருக்கின்றன. அவர்கள் அரசு நிர்வாகத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள் சி பி ஐ யை பொருத்த மட்டில், அதன் விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். எனது குழு அதனை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன். " என்று கூறியுள்ளார்.
இந்நிலையில்தான், மத்திய அரசு அமைத்து வைத்து இருக்கும் இந்த குழு வெறும் கண்துடைப்பு நாடகம் என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக