சென்னையில்,
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிக்கு தடை விதிக்க அரசு தயங்காது என்று கூறியுள்ளார். மேலும், பா.ம.க.வின் சட்ட விரோத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையின் போது சேதம் அடைந்த அரசு சொத்துக்களுக்கு இழப்பீடு பா.ம.க.விடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வன்முறையில் ஈடுபட்டால் குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கூறியுள்ளார்.
dailythanthi thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக