- TUESDAY, 21 MAY 2013 13:02
ஜூலை 6ம் திகதிக்குள் ஆட்டோ கட்னத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர், 2009ம் ஆண்டு, ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். சென்னை மாநகரில் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து மீட்டர் பொருத்தி பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் சரியான தீர்வு கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் 2வது வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர். ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து நிறைவேற்ற கால அவகாசம் தரவேண்டும் என்று தமிழக் அரசு சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதை ஏற்று 8 வார கால அவகாசம் கொடுத்து, விசாரணையைத் தள்ளி வைத்தது,உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் மே 6ம் திகதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 மாத காலத்திற்குள், அதாவது வரும் ஜூலை 6ம் திகதிக்குள் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து அமுல் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதற்கான விவரங்களை ஜூலை 22ம் திகதிக்கு முன்னதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளன.ர் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 22ம் திகதி நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக