puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 24 மே, 2013

சவுதி அரேபியாவில் இருந்து 56, 700 இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளனர்?


சவுதி அரேபியாவில் இருந்து 56 ஆயிரத்து 700 இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு  அங்குள்ள இந்திய தூதரகத்தில் பெயர்  பதிவு செய்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். வேலை வாய்ப்புக்களில் 10 சதவிகிதத்தை சவுதி இளைஞர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டது. இந்தியர்கள் வெளியேற அவகாசம் அளிக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று அந்நாட்டு அரசு வருகிற ஜூன் 3 வரை கால அவகாசம் அளிக்கமுன்வந்தது.

சவுதியில் தங்கியிருப்பதற்கான ஆவணங்களை சரி செய்து கொள்ள முடியாத இந்தியர்கள் தங்களது பெயரை அங்குள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான எக்சிட் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இச்சூழ்நிலையில் சிக்கியுள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து வருகின்றனர். குறித்த காலக்கெடுவுக்குள் இவ்வாறு பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறாவிடின் கைதாகும் நிலை ஏற்படலாம்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், டெல்லியில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் "சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற 56 ஆயிரத்து 700 இந்தியர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். அடுத்த ஒன்றரை மாதத்தில் இவர்கள் அனைவரையும் தாயகம் திருபி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
இவ்வாறு நாடு திரும்புவர்களில் 21,000 ற்கு மேற்பட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். 8,695 பேர் ஆந்திர பிரதேசத்தையும், 7,913 பேர் மேற்குவங்கத்தையும் சேர்ந்தவர்கள். 5,430 பேர் தமிழ்நாட்டுக்கு திரும்பவுள்ளனர்.

அதோடு சவுதியில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்காக இந்தியாவில் இருந்து 10 அதிகாரிகளை அனுப்பி  இருப்பதாகவும், இந்தியர்கள் நாடு திரும்பும் விஷயத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க சவுதி இளவரசரை சந்தித்து பேச உள்ளதாகவும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
 4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக