|
|
தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வந்தவாசியை சேர்ந்தவர் ஜெரினா (34). இவருக்கு ஜாகீர் உல்லா (5),
கிஸ்மத் (இரண்டரை), யாஸ்மின் (ஒன்றரை) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் இஸ்மாயில் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனிடையே, ஜெரினாவுக்கும், உத்திரமேரூர் குப்பாயநல்லூர் கிராமத்தை சேர்ந்த சோன்பப்டி வியாபாரி அருள் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் உத்திரமேரூர் நீரடி கிராமத்தில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர்.
குழந்தைகளும் அவர்களுடன் இருந்தனர். இந்நிலையில் குழந்தைகளை வந்தவாசியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வரும்படி அருள் கூறியுள்ளார். இதற்கு ஜெரினா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியில் இருந்த ஜெரினா, நேற்று மாலை 3 குழந்தைகளையும் அழைத்து சென்று அங்குள்ள வயல்வெளி கிணற்றில் வீசிவிட்டு குதித்துள்ளார். அங்கு, மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை காப்பாற்ற போராடியுள்ளனர்.
அதற்குள் 3 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டன. ஜெரினாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் விரைந்து வந்தனர். குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உத்திரமேரூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
viyapu thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக