பதிவு செய்த நாள் -
மே 15, 2013 at 10:05:41 AM
சிவகாசி அருகே உள்ள சிங்கம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனாட்சி ஃபயர் ஒர்க்ஸ் ஆலையில் இன்று காலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர், தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்னர். இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற சில முக்கியமான பட்டாசு விபத்துகள் :
- கடந்த 2005ம் ஆண்டு சிவகாசி மீனாம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 20 பேர் மரணமடைந்தனர்.
- 2009ம் ஆண்டு சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் ஸ்ரீகிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
- 2010ம் ஆண்டு சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
- கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி விருதுநகர் அருகில் நடைபெற்ற பட்டாசு விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
- 2011 ஏப்ரல் மாதம் சிவகாசியில் நடைபெற்ற மற்றொரு விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
- 2011 ஜூன் மாத்தில் தூத்துக்குடி - குறும்பூர் அருகே நடைபெற்ற பட்டாசு விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
- 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
- 2012 டிசம்பர் மாதம் 25ஆம் தேதி சேலம் மாவட்டம் மேச்சேரி என்ற இடத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
- 2013- கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சிவகாசி அருகே நாரணபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
காணொளி: puthiyathalaimurai.tv thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக