puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 14 மே, 2013

கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை


கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை
கோவை, மே. 14- 

கோவையில் ஒரு வீட்டை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. வீட்டு உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியதாவது:- 

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. 

கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும். வீட்டின் முன்புறம் தங்கவேலுக்கு சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்டினால் ரூ. 1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரியானாவை சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர் சாயிபாபா காலனியில் உள்ள ஒரு வீட்டை சில அடிகள் உயர்த்தினர். 

இதையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது தங்கவேலு வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி நகர்த்தி தர உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர். 

எனவே வீட்டை இடிக்காமல் நகர்த்துவது என முடிவு செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் பணி தொடங்கியது. இதற்காக 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு உயர்த்தி அஸ்தி வாரத்தை துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இந்த வீட்டின் கழிவு நீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப் படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு தகர்த்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

டி.டி.பி.டி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுஷில் ஷிசோடியா கூறும்போது, இதுவரை சுமார் 150 டன் எடையுள்ள வீடுகளை மட்டுமே நகர்த்தியுள்ளோம். முதல் தளத்துடன் 400 டன் எடையுடன் கூடிய கட்டிடத்தை இப்போதுதான் முதல் முறையாக நகர்த்தி வருகிறோம். வீட்டின் சுவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் 35 அடி தூரத்திற்கு நகர்த்தியுள்ளோம். மே மாத இறுதிக்குள் 50 அடி தூரத்திற்கு நகர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள அஸ்திபாரத்தில் வீடு நிலை நிறுத்தப்படும் என்றார்.

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக