First Published : 21 May 2013
தனது மகன்கள் இருவரும் சொத்துப் பிரச்னைக்காக தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் திங்கள்கிழமை பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே வெங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈசாத் (69). இவரது மனைவி கேம்ஸ் அம்மாள் (61). இவர்களுக்கு 5 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
இவர்களுக்கு சொந்த ஊரில் 12 ஏக்கர் நிலம் உள்ளது. இச்சொத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று மூத்த மகன் செல்வக்குமார்,
இவரது மாமனார் செல்லப்பாண்டி, மாமியார் சுசீலா, மற்றொரு மகன் சிம்சன் ஆகியோர் சேர்ந்து ஈசாத்தையும், கேம்ஸ் அம்மாளையும் அடித்து, கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனராம்.
இரு மகன்களிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறு ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் கேமஸ் அம்மாள் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுவரை காவல் அதிகாரிகள் அவர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களை அவ்விரு மகன்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும், அவர்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் ஈசாத்தும், கேம்ஸ் அம்மாளும் புகார் செய்துள்ளனர்
dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக