மண்டபம்:மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவர்கள்
கடலுக்கு செல்லவில்லை. மன்னார் வளைகுடா கடல் கொந்தளிப்பாக உள்ளது.மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் 22 கி.மீ., வேகத்தில் காற்று வீசுகிறது. குடிசை வீடுகளில் வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிகக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் திணறினர். கடற்கரையில் மண்கள் பறப்பதால், மண்டபம் நுழைவு வாயில் ரோட்டை, தென்கடல் புறமாக கடந்து செல்பவர்கள் கண்களை மூடிக்கொண்டோ, கண்ணாடி அணிந்து கொண்டோ செல்லும் சூழல் ஏற்பட்டது. மன்னார் வளைகுடா கடல் கொந்தளிப்பாக உள்ளது. சிறிய நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச்செல்லவில்லை. மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியால் முறிந்து விடுவதுபோல் வளைந்தன. பாம்பன் வானிலை ஆய்வு மையத்தினர் கூறியதாவது: காற்று 22 கி.மீ.வேகத்தில் வீசுகிறது. இன்னும் சில நாட்களுக்கு இதே நிலையில் காற்றும் வீசும் வாய்ப்புள்ளது, என்றனர்.
dinamalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக