புதுடெல்லி, ஏப். 16-
இந்தூரை சேர்ந்த வக்கீல் கமலேஷ் வாஸ்வானி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில், இணையதளத்தில் ஆபாச வீடியோ படங்களை பார்ப்பது குற்றமல்ல, ஆனால் இது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இது தொடர்பான புகாரை சைபர் சட்டப்படி பதிவு செய்வதால் இதற்கு தீர்வு காண முடியாது. அதில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகள் இந்திய அரசியல் சாசனத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இணையதளங்களில் உள்ள ஆபாச தளங்களை (சைட்டுகளை), குறிப்பாக குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இதற்காக ஒரு ஆபாச படங்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் ஒளிபரப்பு மற்றும் உள்துறை அமைச்சர்களுக்கும், இந்திய இணையதள சேவை வழங்குவோர் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் வழங்கவும் நீதிபதி அல்டமாஸ் கபீர் உத்தரவிட்டார்.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக