சியோல், ஏப். 26-
தென்கொரிய எல்லையில் உள்ள வடகொரியா பகுதியில் கெசாங் தொழில் வளாகம் இயங்கி வந்தது. இருநாடுகளும் கூட்டாக அமைத்துள்ள, இதில் இரு நாட்டு தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர்.
போர் பிரகடனம் செய்ததை தொடர்ந்து கடந்த 3-ம் தேதி இந்த வளாகத்தை வடகொரியா மூடியது. இதில் பணிபுரிந்த தனது பணியாளர்களில் ஒரு பகுதியினரை கடந்த 9-ம் தேதி தென்கொரியா திரும்ப அழைத்துக்கொண்டது.
வடகொரியாவில் உள்ள தொழில் மையத்தை மீண்டும் திறக்க பேச்சு வார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா நேற்று அழைப்பு விடுத்தது. இதற்கு வடகொரியா இன்று காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த பேச்சு வார்த்தை அழைப்பை ஏற்கவில்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தென்கொரியா தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த அழைப்பை மோசடியானது என்று கூறி இன்று வடகொரியா நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் தென்கொரிய தொழிலாளர்கள் 170 பேரை திரும்ப பெற்றுக் கொள்வதாக தென்கொரிய அரசு இன்று அறிவித்துள்ளது.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக