துபாய்: ஏப், - 26 - வெளிநாடுகளில் அல்லல்படும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படுகிறது என்று துபாயில் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மைய கூட்டம் 12.04.2013 அன்று காலை மூவன்பிக் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது அனைத்து அமைப்புகளும் துபாய் கம்யூனிட்டி டெவலப்மென்ட் அத்தாரிட்டியில் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசினார். மத்திய அமைச்சர் வயலார் ரவி தனது சிறப்புரையில், சவுதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்தியர்கள் மிக அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். வளைகுடாவைப் பொறுத்தவரை இந்திய பணியாளர்கள் சிறப்பிடத்தைப் பெற்று வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில் அனைத்து துறைகளிலும் ஒரு முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் மாறுபட்டு வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இவை ஸ்திரத்தன்மையுடன் இருந்து வருகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களும், ஊடகங்களும் எவை குறித்தும் பேசவோ தங்களது கருத்துக்களை வெளியிடவோ எந்தவொரு தடையுமில்லை. இதன் காரணமாக அனைவரின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் இந்திய தூதரகங்கள் மூலம் நல நிதி ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் அல்லலுறும் இந்தியர்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது என்றார். அபுதாபி இந்திய தூதரக அதிகாரி பரதன், கன்சல் எம்.பி. சிங், அசோக் பாபு, தொழில் அதிபர்கள் ராம் புக்?ஷானி, பரத்பாய் ஷா, துபாய் ்டிஏ அஸ்கான் நிர்வாக இயக்குநர் அலுவலக மேலாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான், துபாய் ்மான் அமைப்பின் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், துபாய் தமிழ்ச் சஙக தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் கீழை ஹமீதுர் ரஹ்மான், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் கீழை ராஜாகான், துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் பொதுச் செயலாளர் பி.டி. அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
tamilpoint thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக