First Published : 24 April 2013
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்குப் பகுதிகளான புது தில்லி, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.
ஏப்ரல் 16ம் தேதி இதேப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்றும் அதேப் போல நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக