கொல்கத்தா :
கொல்கத்தாவில் உள்ள விபசார விடுதிகளில் அழகிகளைத் தேடி வருகிற வாடிக்கையாளர்கள் அவர்களிடம் இன்பம் அனுபவித்து விட்டு அதற்கான கட்டணத்தை கள்ள நோட்டாக தந்து ஏமாற்றி விடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், சோனாகச்சி பகுதி பிரசித்தி பெற்ற சிவப்பு விளக்கு பகுதி ஆகும். இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபசார அழகிகள் உள்ளனர்.
மெல்லிய வெளிச்சத்தில் கள்ளநோட்டு எது, நல்ல நோட்டு எது என கண்டுபிடிப்பது கடினம் என்பதால் இப்படி விபசார அழகிகள் எளிதில் ஏமாற்றப்பட்டு வந்தனர். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த விபசார அழகிகள் வங்கிக்கு டெபாசிட் செய்யச் செல்கிறபோதுதான் அவர்கள் கொண்டு செல்கிற ரூபாய் நோட்டுகளில் பல கள்ளநோட்டுகள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இது பற்றி ஒரு விபசார அழகி கூறும்போது, ‘பெரும்பாலும் முதன்முதலாக வருகிற வாடிக்கையாளர்கள்தான் இப்படி கள்ளநோட்டுக்களை தந்து விட்டுப்போய் விடுகிறார்கள். மெல்லிய வெளிச்சம் என்பதால் இது பற்றி எங்களுக்கு முதலில் தெரிவதில்லை’ என்றார்.
மற்றொரு அழகியோ வங்காள தேசத்தில் இருந்து வருகிற வாடிக்கையாளர்கள்தான் இப்படி கள்ள நோட்டுக்களை தந்து ஏமாற்றி விடுவதாக குமுறுகிறார்.
இப்படி விபசார அழகிகள் ஏமாற்றப்படுவது பற்றி அவர்களது நலனுக்காக இயங்கி வருகிற தர்பார் மகிளா காமனாய கமிட்டி என்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கு தெரியவந்தது.
இதையடுத்து விபசார அழகிகளுக்கு தன்னார்வ தொண்டு அமைப்பின் ஏற்பாட்டில் கள்ள நோட்டினைக் கண்டுபிடிக்கும் பயிற்சி முகாம் வாரம் ஒரு முறை நடைபெற்று வருகிறது. இப்படி கள்ள நோட்டுக்களை கண்டறியும் பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு, வாடிக்கையாளர்களிடம் விபசார அழகிகள் மிகவும் உஷாராக இருக்கின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன்புகூட இரண்டு விபசார அழகிகள் இப்படி கள்ள நோட்டைத் தந்த இரண்டு வாடிக்கையாளர்களை கையும், களவுமாக பிடித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
rightnews thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக