puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

கீழக்கரையில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் ஜவாருல்லா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்பனைக்குளம்
கீழக்கரையில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஜவாருல்லா எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.
ஜவாருல்லா எம்.எல்.ஏ.,
ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவா ருல்லா நிருபர்களிடம் கூறியதாவது: 201314ம் நிதி யாண்டுக்கான நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலன் மற்றும் சத்துணவு திட் டத்துறை ஆகியவற்றின் மானி யக்கோரிக்கையின் போது கீழக்கரை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை இந்த நிதியாண்டில் தொடங்க வேண்டும் என்றும், மாவட் டத்தில் உள்ள 4 நகராட்சி களில் காலியாக உள்ள துப்பு ரவு பணியாளர் பணியிடங் களை உடனே நிரப்ப வேண் டும் என்று வலியுறுத்தி உள் ளேன்.

இதேபோல ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நிலவும் அசுத்தங்களை அப் புறப்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். ராம நாதபுரத்தில் பாதாள சாக்க டையை விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து சாலை களையும் சீரமைக்க வேண் டும். ராமநாதபுரம் நகரை ஒட் டியுள்ள பட்டணம் காத்தான், சக்கரக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கீழக்கரை யில் கடல் நீரை நன்னீராக் கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சாலைகள்
மண்டபம் யூனியன் பெருங்குளம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தண்ணீர் தொட்டி வரை உள்ள 15 கிலோ மீட் டர் சாலையையும், திருப்புல் லாணி யூனியன் கோரைக்குட் டம் கிராம சாலையையும், நொச்சியூரணி பால்குளம் சாலையையும், கீழக்கரை நெடுஞ்சாலையில் இருந்து காஞ்சிரங்குடி கிராமத்திற் கான சாலையையும், பாம்பன் தெற்குவாடி முதல் முந்தல் முனை வரையுள்ள சாலை யையும் செப்பனிட நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியமும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியமும் வழங்க வேண்டும். தொண்டி பேரூராட்சியில் அமைந் துள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி வளாகத்திலேயே சத்ததுணவு சமையல் கூடம் அமைக்க வேண்டும். தேர்தலின் போது பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்களுக்கு இது வரை படித்தொகை வழங்கப் படவில்லை. அதனை உடன டியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
இதேபோல சமூக பொரு ளாதார சாதிவாரி கணக்கெ டுப்பு பணியில் ஈடுபட்ட சத் துணவு ஊழியர்களுக்கு அதற் கான படித்தொகை ஓராண் டாகியும் வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் பல யூனியன் அலுவலகங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி பதிவே டுகள் பராமரிக்கப்படாமல் உள்ளது. 2010ம் ஆண்டு முதல் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படா மல் உள்ளது. இந்த குறை களை உடனடியாக போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.

dailythanthi. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக