ராமநாதபுரம், ஏப். 26-
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு சுமார் 10 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால் தற்போது ராமநாதபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடம் உள்ள நிலம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள இடம் ஆகிய இடங்களை புதிதாக அமையவிருக்கும் அரசு மருத்துவ கல்லூரிக்கு வழங்க வேண்டியுள்ளது.
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மற்றும் அதனை சார்ந்த இடங்களை மருத்துவத்துறைக்கு ஒப்படைக்கும் விதமாக அண்மையில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம் அதன் தலைவர் சாந்தி சாத்தையா தலைமையில் துணைத்தலைவர் வேலம்மாள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இது தொடர்பான விவாதத்தில் புகழேந்தி செல்வம், அன்புபக்ருதீன், அசோக் குமார் உள்ளிட்ட அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். இறுதியில் அரசு கேட்டு கொண்டதற்கிணங்க ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க ராமநாதபுரம் ஒன்றியக்குழு அலுவலக கட்டிடத்தையும், நிலத்தையும், பகுதியையும் அரசிடம் ஒப்படைப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இப்பகுதியில் விரைவில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக