puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கல்வி நிறுவனங்களா? கொள்ளையர்களின் கூடாரமா?



ஏப்ரல் 29/2013: அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்ப்படுத்த ஸ்கூல் சலோ பிரச்சாரம் நடத்தப்படுகிறது. 

ஏழ்மை, வறுமை காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் பலர் திணறுகின்றனர். சம கல்வி, உயர் கல்வி வரை அனைவருக்கும் இலவசம் ஆகியவற்றை அமல்படுத்த எந்த அரசும்  தயாராக இல்லை. 

இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் சார்பாக ஆண்டு தோறும் இந்தியா முழுவதும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிரச்சாரம்  டெல்லியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கோட்டையில் துவங்கியது.
  
"நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை அளிப்பது சமூகத்தின் கடமையாகும். சாதி, மதம், பாலினம் பாராமல் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் இதுவே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்

கிராமப்பகுதிகளில் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ ஒவ்வொரு ஆண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக  ஸ்கூல் சலோ பிரச்சாரத்தின் மூலம் ஒரு லட்சம் ஸ்கூல் கிட் (பள்ளிக்கூடம் செல்ல தேவையான புத்தகங்கள், இதர பொருட்கள் அடங்கிய பை) விநியோகிக்கப்படுறது. மேலும் கல்வி குறித்த சர்வே, கல்வி பற்றி  விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூட படிப்பை  பாதியில்  நிறுத்திய மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் செய்து வருகிறது. 

சிந்திக்கவும்; எல்.கே.ஜி., யு.கே.ஜி போன்ற படிப்புகளுக்கே பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கூடங்களின் வாயிலில் பண மூட்டையோடு தவம் கிடக்க வேண்டியது இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் கொள்ளையர்களின் கைகளில் சிக்கி தவிக்கிறது. கல்வி கொள்ளையர்கள் குழந்தைகளுக்கு கூட நுழைவு தேர்வு நடத்து கின்றனர். 

கல்வியை வியாபாரம் ஆக்கி கொள்ளையடிக்கும் பெரும் கூட்டத்தினர் வாழும் நாட்டில் வருங்கால சந்ததிகளின் நலன் கருதி கல்வி குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருவதோடு ஒரு லட்சம் குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்வதற்கு நமது பாராட்டுகள்.
சிந்திக்கவும் thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக