ஹவேரி: ஏப், - 28 - கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு உலக சாதனை படைத்திருக்கிறது
என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்ர் ராகுல் காந்தி சாடியுள்ளார். கர்நாடகாவில் மே 5-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக 2-ம் கட்டமாக நேற்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் கட்சியின் ஊழலைப் பற்றி பாஜக பேசி வருகிறது. ஆனால், பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெறும் ஊழல்கள் அதன் கண்ணில் படவில்லை. ஊழலில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு உலக சாதனையே படைத்துவிட்டது. நாட்டு மக்களின் நலனை புறக்கணித்துவிட்டு, பணத்துக்காக பாஜக தலைவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஆட்சி மீண்டும் தேவையா?. மக்கள் பணத்தை பாரதிய ஜனதா சுரண்டுகிறது. உங்கள் பணம் உங்கள் கையில் என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், உங்கள் பணம் எங்களுடன் என்று பாரதிய ஜனதா சொல்கிறது. பணத்தின் அடிப்படையில்தான் 2008-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது. பெல்லாரி சகோதரர்கள் இரும்புத் தாதுக்களைச் சுரண்டி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்து செல்வாக்கு பெற்றுள்ளனர். எனவே இந்த அரசு பெல்லாரி அரசு, பாரதிய ஜனதா அரசு அல்ல என்றார் அவர்.
thinaboomi tha nks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக