TUESDAY, 23 APRIL 2013 10:55
சிறிலங்காவில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென,
அந்நாட்டு அரசிடம் பிரித்தானிய அரசாங்கம் கொரியிருப்பதாகத் தெரிய வருகிறது. சிறிலங்காவில் மனித உரிமைகள் காட்டப்படும் அக்கறைகள் தொடர்பில் பிரித்தானியாக உன்னிப்பாகவும், தொடர்ச்சியாகவும் கண்காணித்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,பக்கச்சார்பற்ற செய்திகள் மக்களை சென்றடைவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாதெனவும், ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
2012 நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மீளாய்வு அமர்வுகளின் போதும் இது குறித்து பிரித்தானியா வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் சிறிலங்காவிற்கு விசேட பிரதிநிதி ஒருவர் விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் பிரித்தானியா கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஆயினும் பிரித்தானிய கோரிய விசேட பிரதிநிதியின் விஜயத்தை சிறிலங்கா அரசு நிராகரித்து விட்டதாகவம் தெரிவித்துள்ளார்.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக