puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

காதல் தோல்வியால் வேதனை: காதலன் வீட்டில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து சாவு


காதல் தோல்வியால் வேதனை: காதலன் வீட்டில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து சாவு
வேளச்சேரி, ஏப். 28-

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் புவனேந்திரன் நாயர். இவரது மகள் ஜீவா நாயர் (23). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராகுல் (24). சென்னை போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். 

பள்ளிக்கரணையை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் வீடு எடுத்து தங்கி உள்ளார். ஜீவா நாயரும், ராகுலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக ஜீவா நாயருடன் பழகுவதை ராகுல் நிறுத்திவிட்டார். இதனால் நேற்று மதியம் ஜீவா நாயர் பெங்களூரிலிருந்து சென்னை வேளச்சேரிக்கு வந்து ராகுலை சந்தித்தார். 

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகுல் அவரை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஜீவா நாயர் மனம் உடைந்தார். பின்னர் ஜீவா நாயர் தான் குளிக்க வேண்டும். அதனால் ராகுல் வீட்டிற்கு அழைத்து செல்ல கூறியுள்ளார். ராகுலும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அறையின் கதவை பூட்டிக்கொண்டு ஜீவா நாயர் பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் அவர் அலறி துடித்தார். வெளியில் நின்றிருந்த ராகுல் கதவை உடைத்துக் கொண்டு பார்த்த போது ஜீவா நாயர் உடல் கருகி பிணமாக கிடந்தார். 

பள்ளிக்கரணை போலீசார் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக