பெங்களூர், ஏப். 24-
கர்நாடக மாநிலத்தில் மே 5-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜனதாவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களமிறங்கி உள்ள காங்கிரஸ் கட்சி, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி வெளியிட்ட அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ரூ.5 லட்சம் வரை 3 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். இதுதவிர இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1500 கோடி ஒதுக்கப்படும். தினமும் 8மணி நேரத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இலவச ‘லேப்டாப்’ அல்லது ‘டிஜிட்டல் நோட்பேட்’ வழங்கப்படும். பள்ளிக் கல்வியில் கன்னட பயிற்று மொழி கட்டாயமாக்கப்படும். முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில மொழிப் பயிற்று முறை அறிமுகப்படுத்தப்படும்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ரேசன் கடைகளில் கிலோ ஒரு ரூபாய் வீதம் மாதந்தோறும் 30 கிலோ அரிசி வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் தீவிரவாத செயல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சூரிய சக்தியின் மூலம் இயங்கும் 10 எச்.பி. வரை உள்ள விவசாய பம்ப் செட்டுகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

news maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக