- TUESDAY, 23 APRIL 2013 11:00
இரட்டை குடியுரிமை உள்ளிட்ட இரண்டு குற்றப்பிரிவின் கீழ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது,
ஹைதராபாத் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திராவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது, சோனியா காந்தி, தனித் தெலுங்கானா அமைத்து தருவது உறுதி என்று வாக்களித்ததாகவும், கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவர் இப்போது தவறிவிட்டார் என்றும், ஹைதராபாத் மஸ்கஜ சிங் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட மனுவை தாக்கல் செய்து இருப்பவர் ஹைதராபாத் மாநில பாஜகவை சேர்ந்த சதீஷ் அகர்வால் என்பவர். இவர் தனது மனுவில் சோனியா காந்தி, சட்டத்துக்கு புறம்பாக இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார் என்றும், தனித் தெலுங்கானா அமைத்து தருவது உறுதி என்று தேர்தலின் போது, வாக்கு கொடுத்தவர் இப்போது வாக்குறிதியை மீறிவிட்டார் என்றும் கூறி, இதற்கு நியாயம் வேண்டும் என்றும் கேட்டு, ஹைதராபாத் மஸ்கஜ சிங் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் மீதான விசாரணையில், சோனியாகாந்திக்கு ஹைதராபாத் நீதிமன்றம் விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக