puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சென்னை வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற மனைவி


சென்னை வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற மனைவி
ஸ்ரீபெரும்புதூர், ஏப்.26-

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2-ந் தேதி 45 வயது மதிக்கதக்க ஆண் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரிய வில்லை. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் வளசர வாக்கம் திருவள்ளூவர் நகரை சேர்ந்த மோகன் என்பதும் அவரை மனைவி அம்சாவே தீர்த்து கட்டி இருப்பதும் தெரியவந்தது. அம்சாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்து வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:- 

நாங்கள் இருவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த கீரை வியாபாரம் செய்து வந்தோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் கணவர் மோகன் பணத்தை குடித்தே செலவழித்தார். மேலும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு உருவானது. அப்போது என்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். 

இதையடுத்து கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று வரும் போது பஸ் நிலையம் பின்புறம் மறைவான இடம் இருப்பதை பார்த்தேன். அங்கு கணவரை அழைத்துச் சென்று கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த மாதம் 1-ந்தேதி இரவு ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லலாம் என கணவரை அழைத்துச் சென்றேன். பஸ் நிலையம் பின்புறம் உள்ள மறைவான இடத்தில் அமர்ந்து பேசினோம். ஏற்கனவே அவர் வாங்கி வைத்திருந்த மதுவை ஊற்றிக் அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். 

சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். கீரை கட்டை அறுக்கும் சிறிய கத்தியால் அவரது கழுத்தை அறுத்தேன். அங்கேயே அவர் துடித்துடித்து இறந்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டேன். அக்கம் பக்கத்தினர் கணவர் எங்கே என கேட்டனர். அவர் வெளியூர் சென்றிருப்பதாக கூறி சமாளித்து வந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு அம்சாவின் உறவினர் ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்திற்கு வேறு ஒரு வழக்கு சம்பந்தமாக சென்றார். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பிணங்களின் போட்டோவில் மோகன் படம் இருந்ததை பார்த்து அடையாளம் கூறினார். 

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மனைவி அம்சாவிடம் விசாரித்த போது தனக்கு ஏதும் தெரியாது. ஸ்ரீபெரும் புதூருக்கே வந்தது இல்லை என நாடகமாடி உள்ளார். அவரது செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கிய போது ஸ்ரீபெரும்புதூர் டவரில் இருந்து வேறு எண்ணிற்கு பேசியது தெரிந்தது. 

பின்னர் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பெண் ஒருவர் தனியாக கொலை செய்திருக்க முடியுமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதில் வேறு யாராவது அவருக்கு உதவி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கணவரை மனைவியே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

maalaimala thasnks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக