ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வழுதூர் விலக்கு சாலையில் செவ்வாய்க்கிழமை கார் மீது லாரி மோதிய விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம், மெகபூப்நகர் மாவட்டம், நாராயணப்பெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூரி சித்தராமப்பாவின் மகன் அனில்குமார் (28), சேங்கர் மகன் மாணிக் (34), தேவன்னா மகன் ரமேஷ்குமார் (36). இவர்கள் 3 பேரும் ராமேசுவரத்துக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டு காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அதே ஊரைச் சேர்ந்த ஜெனார்த்தனன் ரெட்டி மகன் கருணாகர ரெட்டி (32) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கார் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் அருகே வழுதூர் அய்யன்கோவில் பகுதியில் வந்த போது, எதிரில் செங்கல் ஏற்றிக்கொண்டு மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற லாரி மீது மோதியது.
இவ் விபத்தில் காரில் பயணம் செய்த அனில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணிக் (34) பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கருணாகர ரெட்டி கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநரான மதுரை டி.கல்லுப்பட்டி அருகே காடநேரி கிராமத்தைச் சேர்ந்த குருநாதன் (29) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக