இஸ்லாமாபாத், ஏப். 16-
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் 2010-ம் ஆண்டு மே 1-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானில் செயல்படும் தெரிக் இ தலிபான் இயக்கம் இதனை மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் கூறுகையில், “அமெரிக்காவிலும், அதன் தோழமை நாடுகளிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என் விரும்புகிறோம். ஆனால் இந்த தாக்குதலில் நாங்கள் ஈடுபடவில்லை. அதேசமயம் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த முடியுமோ அங்கு அவர்களை குறிவைப்போம்” என்றார்.
பாஸ்டன் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் செப்டம்பர் தாக்குதலை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. எனவே, நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக