puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

மின் உற்பத்திக்கான புதிய கருவிகள் கண்டுபிடிப்பு: முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை


மின் உற்பத்திக்கான  புதிய கருவிகள் கண்டுபிடிப்பு: முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
ராமநாதபுரம், ஏப்.

ராமநாதபுரம் கீழக்கரையில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்ணணுவியல் துறை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் அஹமது ஹுசேன் ஆசிப், பாசித் கனி, செய்யது முகம்மது பாதூ மற்றும் சின்னத்துரை ஆகியோர் குறைந்த காற்றழுத்தத்தின் மூலம் இயங்கும் புதிய காற்றாலை நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த நவீன கருவியை பற்றி மாணவர்கள் கூறியதாவது:

பொதுவாக ஒரு காற்றாலை மின் உற்பத்தி செய்வதற்கு நொடிக்கு சுமார் 5 மைல் வேகம் உள்ள காற்றழுத்தம் தேவைப்படும். ஆனால் எங்களது நவீன புதிய காற்றாலை கருவி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு நொடிக்கு சுமார் 2 மைல் என்ற மிகக் குறைந்த காற்றின் வேகம் போதும்.

எனவே இதன் மூலம் குறைந்த காற்றழுத்தமுள்ள இடங்களில்கூட இந்த புதிய நவீன காற்றாலையை நிறுவி மின் உற்பத்தியை பெருக்கிக் கொள்ளலாம். மேலும் இந்த நவீன காற்றாலை மூலம் 60 சதவிகித மின் உற்பத்தியை பெறமுடியும். இதனால் தற்சமயம் உள்ள காற்றாலையை விட 20 சதவிகித மின் உற்பத்தி நமக்கு அதிகமாக கிடைக்கும்.இந்த நவீன காற்றாலையை குறைந்த முதலீட்டில் உருவாக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாட்டின் மின் தேவையை உணர்ந்து இந்த நவீன கண்டுபிடிப்பை நாங்கள் தயார் செய்துள்ளோம். வருங்காலங்களில் இந்த நவீன காற்றாலையை பயன்படுத்துவதன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு இதன் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும்.

மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பை கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, கல்லூரி முதல்வர் முகம்மது ஜஹாபர், துறைத்தலைவர் சுரேஷ்குமார் மற்றும் கல்லூரி அலுவலர்கள் பாராட்டினார்கள்.

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக