puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 22 ஏப்ரல், 2013

பாஸ்டன் குண்டு வெடிப்பின் எதிரொலி அடங்கும் முன் வாஷிங்டன் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி



அண்மையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் பலியாகியிருந்ததுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து போலிஸ் புலனாய்வுத் துறையினரின் அதிரடித் தேடுதலிலும் வீடியோ ஆதாரங்கள் மூலமாகவும் இதில் சம்பந்தப்பட்ட ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்ட Dzhokhar Tsarnaev மீது தண்டனை விதிப்பதற்கு வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றனர்.

இந்நபர் மீது பொதுமக்களைக் கொல்வதற்கு ஆயுதங்களைப் பாவித்த குற்றத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப் படும்  சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகின்றது. மேலும் இவரும் இக்குண்டுவெடிப்பில் சிக்கியிருந்ததால் தற்போது தொண்டையில் காயம் ஏற்பட்டு பேச முடியாத சூழ்நிலையில் வைத்திய சாலையில் உள்ளார். இதனால் பத்திரத்தில் எழுதுவதன் மூலம் இவரிடம் வாக்குமூலம் பெற போலிசார் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் பாஸ்டன் குண்டு வெடிப்பின் எதிரொலிகள் அடங்கும் முன்னரேயே அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் சியேட்டில் நகரின் தெற்கே 30 km தொலைவில் உள்ள fedaral way இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய நபர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஞாயிறு இரவு 9.30 மணிக்கு குறித்த மாடிவீட்டின் அருகே சாலையில் உள்ள தொலைபேசிக் கூட்டில் இருந்து 911 இற்கு வந்த அழைப்பை அடுத்து போலீசார் விரைந்து அவ்விடத்துக்கு வந்துள்ளனர். இவர்களுக்குத் தகவல் அளித்தது காயமடைந்தவர்களில் இரு மனிதர்கள் ஆவார்கள். ஸ்தலத்துக்கு வந்த போலிசார் தாக்குதல் நடத்தியதில் சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி கொல்லப் பட்டதாக கூறப்படினும் இதனை உறுதிப் படுத்த முடியவில்லை. மேலும் கொல்லப் பட்ட 5 பேரினது விபரங்களையும் போலிசார் இதில் காயமடைந்தனரா என்ற தகவலையும் அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக